வால்பாறை புது மார்க்கெட் கடைகளை புதுப்பித்து தர தையற்கலைஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோவை: வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை புதுப்பித்து தரக் கோரி தையற்கலைஞர்கள் சங்கத்தினர் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கோவை: வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை புதுப்பித்து தரக் கோரி தையற்கலைஞர்கள் சங்கத்தினர் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள புதுமார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தையற்கடைகள் உள்ளன. இந்த கடைகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி மழைக்காலங்களில் ஒழுகுவதோடு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், வால்பாறை நகராட்சியில் புதிதாக பதவியேற்றுள்ள ஆணையாளர் டாக்டர் பவன் ராஜ் அவர்களை தையற்கலைஞர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து மார்க்கெட் பகுதி கடைகளை பராமரித்து தரும்படியும் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டி தங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை பெற்றுக்கொண்ட ஆணையாளர் டாக்டர் பவன் ராஜ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, வால்பாறை தையல் கலைஞர்கள் சங்கத் தலைவர் முனுசாமி, செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் ஜான்சன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...