குஜராத் மாநிலத்தில் இருந்து அதிக்கப்படியான உருளைக்கிழங்கு வரத்தால், மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் விலை சரிவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு ஏல விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி, தாளவாடி, கோலார், ஆசன், குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏல மையங்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டுவரபட்டு தரம் பிரிக்கபட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டு வருகிறது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு ஏல விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நீலகிரி, தாளவாடி, கோலார், ஆசன், குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏல மையங்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டுவரபட்டு தரம் பிரிக்கபட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது உருளைக்கிழங்கின் விலை கடுமையாக குறைந்து வருவதால் உருளைக்கிழங்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



நீலகிரியில் உருளைக்கிழங்கின் விவசாயம் தற்போது சீசன் குறைவு என்பதால் மீதமுள்ள உருளைக்கிழங்கிற்கு இடை சீசனில் நல்ல விலை கிடைக்கும், ஆனால் தற்போது நீலகிரி உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. உரம், களையெடுப்பு, மருந்துகள் என பல்வேறு பராமரிப்பில் விளைவிக்க கூடிய உருளைக்கிழங்கிற்கு தற்போதைய விலை விவசாயம் மேற்கொண்ட கூலிக்கு கூட கட்டாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விலை குறைவுக்கு கோலார், குஜராத் போன்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமான உருளை விளைச்சல் காரணம் என்று தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, இதுவரை விளைந்த கிழங்குகளை இதுவரை குளிர்பத கூடத்தில் இருப்பு வைத்தே இந்த வகை கிழங்குகள் விற்பனைக்கு வரும் ஆனால் இந்தாண்டு அறுவடை முடிந்தவுடன் நேரடியாக விற்பனைக்கு வந்ததால், ஏல மையத்திற்கு வரத்து அதிகரித்துள்ளதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி (45 கிலோ மூட்டை) நீலகிரி உருளைக்கிங்கின் விலை 1000 ரூபாய்கு விற்பனையாகிறது. கோலார் கிழங்கு 600 முதல் 700 ரூபாய்க்கும், குஜராத் கிழங்கு 700 முதல் 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...