திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 19 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். மீட்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சுடன் செயல்பட்டதாகவும் மீட்பு பணிகளை பார்வையிட வந்த கேரள அமைச்சர்கள் பேட்டி.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரளா அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 19 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். மீட்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சுடன் செயல்பட்டதாகவும் மீட்பு பணிகளை பார்வையிட வந்த கேரள அமைச்சர்கள் பேட்டி.

உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், "எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு , உடல்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் ஹேமராஜை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விபத்துக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக லாரியின் டயர் வெடித்தது விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது."
இதனையடுத்து, கேரள மாநிலத்திலிருந்து வேளாண்மை துறை அமைச்சர் சுனில்குமார் போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் வந்தனர்.
இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை முடித்து கேரளா கொண்டு செல்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றதை கண்காணித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மைத்துறை அமைச்சர் சுனில்குமார் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டதால் உயிரிழப்பு அதிகமாவது குறைக்கப்பட்டதாகவும், அதேபோல் உடல்களை பிரேத பரிசோதனை செய்து கேரள மாநிலத்திற்கு அனுப்புவதிலும் முழுவீச்சுடன் செயல்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளை பற்றி பேசிய கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்தரன் செய்தியாளர்களிடம் கூறியபோது உயிரிழந்த பயணிகள் அனைவருக்கும் 10 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வாரத்திற்குள் 2 லட்சம் உடனடியாக வழங்கப்பட்டு மீதமுள்ள பணம் அடுத்த கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கேரள அரசு பேருந்து ஓட்டுனர்கள் இருவருக்கும் போக்குவரத்து துறை சார்பில் காப்பீட்டு தொகை 30 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
19 உயிர்களை பறித்த விபத்து
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் கேரளாவிலிருந்து டைல்ஸ் கற்களை ஏற்றி சேலம் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் அவிநாசி அருகே கோவை சேலம் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 19 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர் மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஹேமந்த் ராஜ் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.