ஈஷாவின்‌ 'யக்க்ஷா' விழா நிறைவு; பார்வையாளர்களை கவர்ந்த பாரம்பரிய ஒடசி நடனம்‌

கோவை: கோவை ஈஷாவின்‌ 'யக்க்ஷா' கலைத்‌ விழாவின்‌ நிறைவு நாளான இன்று (பிப்‌.20) பிரபல ஒடிசி நடன கலைஞர்‌ ஷர்மிளா பிஸ்வாஸ்‌ குழுவினரின்‌ நடனம்‌ பார்வையாளர்களை பாராட்டுக்களை பெற்றது.

கோவை: கோவை ஈஷாவின்‌ 'யக்க்ஷா' கலைத்‌ விழாவின்‌ நிறைவு நாளான இன்று (பிப்‌.20) பிரபல ஒடிசி நடன கலைஞர்‌ ஷர்மிளா பிஸ்வாஸ்‌ குழுவினரின்‌ நடனம்‌ பார்வையாளர்களை பாராட்டுக்களை பெற்றது.



இவ்விழாவில்‌, பிரபல ஒடிசி நடன கலைஞரான ஷர்மிளா பிஸ்வாஸ்‌ குழுவினரின்‌ இன்று அரங்கை அதிர செய்தனர்‌. நளினத்துடன்‌ கூடிய அவர்களின்‌ நடனம்‌ அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. பல நாடுகளில்‌ இருந்து வந்திருந்த நூாற்றுக்கணக்கானோர்‌ நம்‌ பாரம்பரிய நடனத்தை கண்டு ரசித்தனர்.

நம்‌ இந்திய பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்பதற்காக, 'யக்க்ஷா': என்னும்‌ கலைத்‌ திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ ஆண்டுதோறும்‌ நடத்தப்படுகிறது. இதில் கர்நாடக சங்கீதம்‌, ஹிந்துஸ்தானி இசை, ஒடிசி நடனம்‌ போன்ற பாரத பாரம்பரியத்தை பறைச்சாற்றும்‌ கலை நிகழ்ச்சிகள்‌ இடம்பெறும்‌.

அந்த வகையில்‌, நாளை, பிப் 21 ஆம் தேதி மஹாசிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் முன்னதாகவே 'யக்க்ஷா' நிகழ்ச்சி தொடங்கியது. 



முன்னதாக, பன்னாரி அம்மன்‌ சுகர்ஸ்‌ லிமிடெட்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌ எஸ்‌.வி.பாலசுப்பிரமணியம்‌, எஸ்‌.கே.எம்‌. தொழில்‌ குழும மேலாண்‌ இயக்குநர்‌ சிவகுமார்‌ ஆகியோர்‌ சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்‌.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...