கொடநாடு காவலாளி கொலை வழக்கு; குற்றவாளிகள் 9 பேர் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி: கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜரான நிலையில் 2 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

நீலகிரி: கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜரான நிலையில் 2 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை மற்றும் அங்கு நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்த விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் ஜம்சிர் அலி தவிர 9 பேர் ஆஜராகினர். அப்போது, இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை மீண்டும் மார்ச் மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...