கோவை: கோவை ஆத்துப்பாலம் அருகே நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்ட மைதானத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சி.ஏ.ஏ,என். ஆர்.சி போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்கள் வேண்டாம் என கோஷம் எழுப்பினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று(பிப்., 19) காலை கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அறிவிக்கப்பட்டபடி நேற்று இரவு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டம் துவங்கியது.

இந்த போராட்டமானது தற்போது வரை முழக்கங்களுடன் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் வயது முதியவர்கள், குழந்தைகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்ட திடலில் அப்துல்கலாம் மற்றும் ரேஷ்மா தம்பதியினர் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும், திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதோடு, மக்களை பிரிக்கும் சட்டங்களான என்.ஆர். சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர் போன்றவற்றை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.