அவிநாசியில் கேரள பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலி; உயிரிழந்தவர்களின் உடலை கேரளாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு!

திருப்பூர்: திருப்பூர் அருகே கேரள அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடலை கேரளாவுக்கு அனுப்பி வைக்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் அருகே கேரள அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடலை கேரளாவுக்கு அனுப்பி வைக்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் கேரளாவிலிருந்து டைல்ஸ் கற்களை ஏற்றி சேலம் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே கோவை சேலம் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா, மனசா என 5 பெண்கள் உட்பட 19 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஹேமராஜ் தலைமறைவாகியுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த பின் பேசிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர் இணைந்து மீட்பு பணியை செய்து வருவதாகவும் மீட்கப்பட்டவர்களில் படுகாயம் அடைந்தவர்கள் திருப்பூர் மற்றும் கோவை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், இந்த விபத்து குறித்து கேரள அரசுக்கு தெரியப்படுத்தியதையடுத்து கேரளாவில் இருந்து ஒரு குழுவினர் வந்து கொண்டிருப்பதாகவும் அவர்களிடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தலைமறைவான லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

அவினாசி கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இறந்தவர்கள் விபரம்:-

1.கோபிகா

2.ஜிஸ்மன் சஜூ

3.மாஸிகா மணிகண்டன்

4.ஜோபி பால்ஸி

5.அணு

6.பைஜூ

7.ஐஸ்வர்யா

8.ராகேஷ்

9.எம்.சி.மேத்யூ

10.சிவக்குமார்

11.கிரீஸ்

12.ஸனூப்

13.இக்னில் ரஃபி

14.சிவசங்கர்

15.இக்னி ராஜ்

16.விஜயகுமார்

17.நசீர்

18.ஜேசுதாஸ்

19.ரோஸ்லி ஜானி

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...