குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவையில் இஸ்லாமியர்களால் இரவில் தொடங்கிய தொடர் காத்திருப்பு போராட்டம்

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவை ஆத்துபாலம் பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கோவை ஆத்துபாலம் பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.அதேபோல கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று (19-02-2020) காலை கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.



இதையடுத்து அறிவிக்கப்பட்டபடி நேற்று இரவு சுமார் 10:30 மணிக்கு மேல் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டம் துவங்கியது.



இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது:-

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் வாக்களித்துள்ளார்கள். இதற்கு பிராய்ச்சித்தமாக மற்ற மாநிலங்களை போல நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே குடியுரிமை சட்டதிருத்தத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களது தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...