அவினாசி அருகே விபத்து; 19 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 20 இக்கும் மேற்பட்ட கேரளா போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இறப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 19க்கும் மேற்பட்ட கேரளா போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இறப்பு. 

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரளா அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.



கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்றதாக கூறப்படும் டைல்ஸ் கற்கள் ஏற்றிய கண்டெய்னர் லாரியும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 23 பேர்களை மீட்கும் பணியானது நடந்து வருகிறது. 

விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



விபத்து குறித்த தெரிவித்த மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன்: விபத்து குறித்து கேரளா அரசுக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளது . கேரளாவில் இருந்து ஒரு குழுவை அனுப்பி அனுப்பியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

தற்போது மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் காயமடைந்தவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் தலைமறைவாகி உள்ளதால் அது குறித்த விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், அவினாசி விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...