கோவை: பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த ஹைதராபாத் சகோதரர்களின் கர்நாடக வாய்ப்பட்டு நிகழ்ச்சியுடன் இனிதே முடிந்தது ஈஷாவில் நடந்தேறிய இரண்டாம் நாள் யக்க்ஷா 2020 திருவிழா.

கோவை ஈஷா யோகா மையத்தில் 'யக்ஷாகலைத் திருவிழாவின் இரண்டாம் நாளில் ஹைதராபாத் சகோதரர்களின் கர்நாடக வாய்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹைதராபாத் சகோதரர்களின் குரலிசையோடு பக்க வாத்தியங்களில் வயலின் வித்வான் VVS. முராரி அவர்களும், மிருதங்க வித்வான் வீரராகவ பாலாஜி அவர்களும், கஞ்சிரா வித்வான் கே.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை முற்றிலும் வேறொரு பரிணாமத்திற்கு உயர்த்தினர்.
ஹைதராபாத் சசோதரர்கள் என அழைக்கப்படும் சேஷாச் சாரி மற்றும் ராகவாச் சாரி ஆகிய இரு சகோதரர்களும் இணைந்து இந்தியா மட்டுமில்லாது, உலகம் முழுவதிலும் 45 வருடங்களாக கர்நாடக இசை நிகழ்சிகளை வழங்கி வருகின்றனர்.

முன்னதாக கே.பி.ஆர் மில்ஸின் உரிமையாளர் கே.பி.ராமசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்.

கோலாகலமாக தொடங்கிய (யக்க்ஷா' விழாவின் முதலாம் நாளான பிப்.18) அன்று உலகின் தலைசிறந்த வயலின் கலைஞர்களில் ஒருவரான கலா ராம்நாத் அவர்களின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, நாளை ஷர்மிளா பிஸ்வாஸின் பாரம்பரிய ஒடிசி நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த கலை நிகழ்ச்சிகள் கர்ய குண்ட மண்டபம் முன்பாக தினமும் மாலை 6.50 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.