நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் சார்பாக 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மசினகுடி பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மகப்பேறு, காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காக மசினகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அதற்காக 2 மருத்துவர்களை மாவட்ட சுகாதாரத் துறை பணியமர்த்தி உள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்களின் பிரவசத்திற்காக தனி மருத்துவ மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த சுகாதார நிலையத்தில் இருந்த ஈ.சி.ஜி எந்திரம் உள்ளிட்ட சில மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. பல மாதங்களாக பழுதுகள் சரி செய்யப்படாமல் இருந்தது. இதனால் அவசர சிகிச்சைக்காக அங்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக, இதய நோய் காரணமாக சுகாதார நிலையத்திற்கு வந்த சில நோயாளிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை கூட தெரிந்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதனால் மசினகுடியிலிருந்து மருத்து சிகிச்சைக்காகக் கூடலூர் அல்லது ஊட்டிக்கு செல்லும் வழியிலேயே சிலர் இறந்துள்ளனர்.
இதனையடுத்து மசினகுடி பொதுமக்கள் சார்பாக ஈ.சி.ஜி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கி நன்கொடை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணியில் மசினகுடி இளைஞர் நற்பணிமன்ற இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் பொதுமக்களே தாங்களாக முன் வந்து அளித்த 1.5 லட்சம் பணத்தை கொண்டு 70 ஆயிரம் மதிப்பிலான ஒரு ஈ.சி.ஜி மருத்துவ கருவி, மின்சாரம் துண்டிக்கப்பட்டால் தொடர்ந்து மின் இணைப்பு கிடைத்திட 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 பேட்டரிகளுடன் கூடிய இன்வேட்டர் கருவி, வெந்நீர், குளிர்ந்த குடிநீர் பெற்று கொள்ள ஒரு வாட்டர் பியூரிபயர், நெபிலேசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டது. அவ்வாறு வாங்கிய மருத்துவ கருவிகள் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட ஆரம்ப சுகாதார துணை இயக்குனர் பாலுசாமி தலைமை வகித்தார். கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மசினகுடி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். அவர்களிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கருவிகளை பொதுமக்கள் முன்னிலையில் மசினகுடி இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்ப்பில் ஒப்படைக்கப்பட்டது. மசினகுடி பகுதி மக்களின் இந்த சீரிய முயற்சியை மருத்துவத் துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.