ஈஷாவில்‌ கோலாகலமாக தொடங்கிய 'யக்ஷா' திருவிழா; கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ நிறுவனர்‌, பொள்ளாச்சி‌ எம்‌.பி. தொடங்கி வைத்தனர்‌

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா நேற்று (பிப்‌.18) கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ நிறுவனர்‌ கிருஷ்ணன்‌, பொள்ளாச்சி‌ தொகுதி மக்களவை உறுப்பினர்‌ சண்முகம்‌ ஆகியோர்‌ குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்‌.

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா நேற்று (பிப்‌.18) கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ நிறுவனர்‌ கிருஷ்ணன்‌, பொள்ளாச்சி‌ தொகுதி மக்களவை உறுப்பினர்‌ சண்முகம்‌ ஆகியோர்‌ குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்‌.



ஈஷாவின்‌ 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும்‌ 21-ம்‌ தேதி மிக விமர்சையாகவும்‌, பிரமாண்டமாகவும்‌ கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவின்‌ தொடக்கமாக உலகின்‌ தலைசிறந்த வயலின்‌ கலைஞர்களில்‌ ஒருவரான கலா ராம்நாத்‌ அவர்களின்‌ வயலின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நெஞ்சை வருடும்‌ அவரின்‌ மெல்லிய வயலின்‌ இசையுடன்‌,.ராம்தாஸ்‌ பால்சுலேவின்‌ தபேலா இசையும்‌ சேர்ந்து கேட்போரை மெய்‌ மறக்க செய்தது. உலகம்‌ முழுவதும்‌ இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ இந்நிகழ்ச்சியை நேரில்‌ கண்டு களித்தனர்‌.



ஹைதராபாத்‌ சகோதரர்கள்‌ என அமைக்கப்படும்‌ சேஷாச் சாரி மற்றும்‌ ராகவாச்‌ சாரி அவர்களின்‌ வாய்ப்பாட்டு நிகழ்ச்சி இன்று ஷர்மிளா பிஸ்வாஸின்‌ பாரம்பரிய ஓடிசி நடன நிகழ்ச்சி 20-ம்‌ தேதியும்‌ நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள்‌ சூர்ய குண்ட மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

கலா ராம்நாத்‌:

“சிங்கிங்‌ வயலின்‌” என அமைக்கப்படும்‌ இவர்‌ உலகன்‌ தலைசிறந்த வயலின்‌ இசை கலைஞர்களில்‌ ஒருவராக விளங்குகிறார்‌. இவரது வயலின்‌ இசை ஆல்பமான மைல்ஸ்‌ ஃபிரம்‌ இந்தியா பிராஜக்ட்‌' கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, 27 பீசஸ்‌ எனும்‌ கிராமி விருதுபெறும்‌ ஆல்பத்திலும்‌ இவரது இசையமைப்புகள்‌ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தானி இசை மேதை பண்டீட்‌ ஜஸ்ராஜ்‌ அவர்களின்‌ சீடரான கலா, தனது பேராசிரியர்‌ டி.என்‌.கிருஷ்ணன்‌ மற்றும்‌ டாக்டர்‌.என்‌. ராஜம்‌ ஆகிய இசை மேதைகளை கொண்ட பாரம்பரிய இசை குடும்பத்தில்‌ பிறந்தவர்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...