திருப்பூர்: திருப்பூரில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கடையில் ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு இருபத்தி ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.

திருப்பூர் - கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் விற்பனை செய்யப்படும் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்கள், டீ டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பொருட்களின் அளவு ஒன்றரை டன் இருக்கும் என தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், கடையின் உரிமையாளர் குணசேகரனுக்கு இருபத்தி ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.