வால்பாறை அட்டகட்டி மையத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி

கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் அட்டகட்டி மையத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் அட்டகட்டி மையத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை மழை பொய்த்த நிலையில் பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து வருகின்றன. மேலும் சாலைகளின் ஓரங்களில் மரங்களின் காய்ந்த இலைகள் நிறைந்து கிடக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் மூலம் பீடி, சிகரெட்டால் தீ பிடித்து வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் அபாயம் உள்ளது.

இதனை தடுக்கும் விதமாக சாலைகளில் உள்ள காய்ந்த இலைகளை அகற்றுவதுடன் வனப்பகுதிக்கும் சாலைகளுக்கும் இடையேயும் தேயிலை தோட்ட பகுதிகளுக்கும் இடையே தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.



இதனை முன்னிட்டு வால்பாறை அட்டகட்டி பயிற்சி மையத்தில் வனத்துறையினருக்கு தீ ஏற்படாமல் தடுக்கும் வழி, தீ ஏற்பட்டபின் தடுக்கும் முறை மற்றும் தீயை கட்டுப்படுத்தி அணைப்பது பற்றிய பயிற்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் இ.வ.ப தலைமையில் நடைபெற்றது.



இந்த பயிற்சியில் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் இ.வ.ப, கள இயக்குநரின் நேர்முக உதவியாளர் முரளீதரன், உதவி வனபாதுகாவலர் செல்வம், பயிற்சி மைய அலுவலர் நவீன், வால்பாறை மானாம் பள்ளி, டாப்சிலிப், உலாந்தி மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த வனத்துறையினர், இங்குள்ள வனச்சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...