கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவிப்பு; கண்ணீர்புகை வண்டியுடன் ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!

கோவை: கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்ததையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர்புகை வண்டியுடன் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிக் கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்ததையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர்புகை வண்டியுடன் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது.



இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட அனைத்து ஜமாத்-இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் மாநகரை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவை ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த இஸ்லாமிய அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று கூடியுள்ளனர். இதையடுத்து சிஏஏவை திரும்பப் பெற வேண்டும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.



இதன் பாதுகாப்பு பணிகளுக்காக கண்ணீர்புகை வண்டியுடன், வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் அறிவிப்பையடுத்து அரசுப்பணிகள் முடக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...