கோவை மாநகரில் மன நிம்மதிக்காக யாசகம் கேட்டு அலையும் ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர்!

கோவை: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மன நிம்மதிக்காக பொதுமக்களிடம் கைகூப்பி யாசகம் கேட்டு அலையும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மன நிம்மதிக்காக பொதுமக்களிடம் கைகூப்பி யாசகம் கேட்டு அலையும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



பணம், பொருள் என ஆயிரம் இருந்தாலும் நிம்மதியைத் தேடி அலையும் கூட்டம் இவ்வுலகில் பரவலாக உள்ளது. இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் யாசகம் எடுப்பதில் தான் உணர்ந்த நிம்மதியை தொடர்ந்து கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கிம் மன நிம்மதியைத் தேடி தன் வாழ்க்கையின் பல நாட்களை செலவழித்துள்ளார். அதேபோல், பல்வேறு நாடுகளுக்கும் சுற்றி திரிந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த அவர் மன நிம்மதி வேண்டி யாசகம் எடுக்க முன் வந்தார்.



இதைத்தொடர்ந்து, கோவையில் பொது மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் யாசகம் கேட்டு பெற்று வருகிறார். மேலும், பொதுமக்கள் கொடுக்கும் பணத்தை வைத்து உணவருந்தியும் வருகிறார். ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர் எளிய மக்களாக யாசகம் கேட்டு உணவருந்தி வாழ்வது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...