நீலகிரி வனப்பகுதியில் இறந்த குட்டியானையை வனத்துறையினர் நெருங்க விடாமல் தடுக்கும் தாய் யானை

நிலகிரி: தனியார் தோட்டத்தை ஒட்டி வனப்பகுதியில் இறந்த குட்டி யானையை நெருங்க விடாமல் தாய் யானை அருகிலேயே நிற்பதால் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தாமதமாகி உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிலகிரி: தனியார் தோட்டத்தை ஒட்டி வனப்பகுதியில் இறந்த குட்டி யானையை நெருங்க விடாமல் தாய் யானை அருகிலேயே நிற்பதால் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தாமதமாகி உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், தாய் யானை தானாக அங்கிருந்து செல்லும்வரை பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை ஒத்திவைத்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொச்சுகுன்னு தனியார் எஸ்டேட் பகுதியை ஓட்டி வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன் இறந்துள்ளது. 

யானைக் கூட்டம் அப்பகுதியிலேயே நிற்பது குறித்து தோட்ட நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து தகவல் அறிந்து நேற்று மாலை அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதையும் அருகில் மூன்று யானைகள் நிற்பதையும் பார்த்துள்ளனர். 

அருகில் நெருங்க முயன்றபோது அங்கிருந்த தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகள் விரட்டியதாலும் இருட்ட துவங்கியதாலும், பின் வாங்கிய வனத்துறையினர் இன்று காலை முதல் யானைகளை கண்காணித்து இறந்த குட்டியை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

ஆனால், இன்றும் தாய் யானை குட்டியின் அருகிலேயே நிற்பதால் குட்டியை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தூரத்தில் நின்று கண்காணித்து வருகின்றனர். 

பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றால் அது மேலும் ஆக்ரோஷம் அடையக்கூடிய சூழல் ஏற்படக்கூடும் என்பதாலும், யானை இறந்து கிடக்கும் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததாலும் யானை தானாகவே அங்கிருந்து செல்லும்வரை குட்டியின் அருகில் செல்லும் நடவடிக்கையை வனத்துறையினர் கைவிட்டு உள்ளனர். 

அத்துடன் அப்பகுதியில் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல கூடாது என்றும் பொதுமக்கள் யாரும் யானை நிற்கும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன் சேரம்பாடி பகுதியில் இதேபோல் வனத்துறையினர் இறந்த குட்டி யானையை பிரேத பரிசோதனை செய்வதற்காக அங்கிருந்து எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது தாய் யானையுடன் வந்த மற்ற யானைகள் ஆக்ரோசமாக வாகனங்களை உடைத்தும் அருகிலுள்ள கோவிலை இடித்தும் சேதப்படுத்தியதால் தற்போது குட்டியிடம் இருந்து தாய் யானையை விரட்டும் நடவடிக்கைகளில் மாலை வரை ஈடுபட்ட வனத்துறையினர், பின்னர் திரும்பிச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...