கோவையில் சினிமா ஆசை காட்டி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து பணம் பறித்த இளைஞர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் சினிமா ஆசை காட்டி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவத்தையடுத்து, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் சினிமா ஆசை காட்டி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவத்தையடுத்து, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜிஷ்ணு (28). புகைப்படக் கலைஞரான இவர் ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்தபடி சினிமா துறையில் தொடர்பு இருப்பதாக தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பல பெண்களை தன் வசப்படுத்தவும் முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளைஞருக்கு கோவையைச் சேர்ந்த திருமணமான 38 வயது மதிப்புடைய பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து இளைஞர் விஷ்ணு அந்த பெண்ணிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளார். இப்படி சுமார் மூன்று ஆண்டுகளாக பழகி வந்த இவர்களுக்குள் திடீரென வெறுப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த ஜிஷ்ணு தான் கேட்கும் பணம் தரவில்லை என்றால் இருவரும் ஒன்றாக இருந்தது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், நேற்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜிஸ்னு, ஒரு லட்ச ரூபாய் பணம் தருமாறு தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஜிஷ்ணு குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜிஷ்ணுவை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...