கோவை: கோவையில் வேலையின்மையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய வேலையின்மைக்கு எதிராக பேரணியின் போது 50க்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, டி.என்.பி.எஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை சி.பி.ஐ விசாரணை வேண்டியும், வேலையின்மைக்கு எதிராகவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டியும், படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.