கோவை: கோவையில் மண்டல அளவிலான தொழிற் பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சோக்கை முகாம் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 24.02.2020 அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது ;-
தேசிய தொழிற்பழகுநார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோயம்புத்தூர் மண்டல அளவில் தொழிற் பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் கோயம்புத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 24.02.2020அன்று காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 1000-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் NAC பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.
தற்போது தொழிற்பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப ரூ.7500 முதல் கிடைக்கும். அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி-யின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றவர்கள், 8, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை அறியும் பொருட்டு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோயம்புத்தூர் அவர்களை நேரிலும் மற்றும் தொலைபேசி (0422- 2642044) வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.