கோவையில் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

கோவை: சமையல் கேஸ் விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசை கண்டித்து பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: சமையல் கேஸ் விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசை கண்டித்து பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு மானியம் இல்லாத சிலிண்டர் விலை சமீபத்தில் உயர்த்தியதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர், குறிப்பாக ஏழை நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டரை பாடையில் எடுத்து வந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், திடீரென சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியபடி காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அமைப்பினர் உட்பட பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...