தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் இஸ்லாமியர்கள் தேசிய கொடியேற்றி போராட்டம்

கோவை: தமிழக சட்டமன்றத்தில் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ.,க்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோவை கரும்புக்கடை,உக்கடம் போன்ற இஸ்லாமியர்கள் வாழும் குடியிருப்பு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர்.



கோவை: தமிழக சட்டமன்றத்தில் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ.,க்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோவை கரும்புக்கடை,உக்கடம் போன்ற இஸ்லாமியர்கள் வாழும் குடியிருப்பு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் என இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



அதேபோல், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோரிக்கைகளும் எழுந்து வந்தது. இந்தக் கோரிக்கையின் தொடர்ச்சியாக இன்று கோவை உக்கடம், கரும்புகடை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வருகின்றனர்.



மேலும், சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளின் முன்பாக தேசிய கொடியினை ஏற்றி இஸ்லாமியர்கள் தேசத்தின் பூர்வகுடிகள்தான் என்பதை அரசுக்கு உணர்த்த உள்ளதாக ஒருங்கிணைப்பு குழுவினரான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...