திருப்பூர்: சென்னை வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக தடியடி நடத்திவிட்டு தற்போது தமிழக அரசு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவதாக, திருப்பூரில் மூன்றாவது நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருட்டினன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் அறிவொளி நகர் பகுதியில் மூன்றாவது நாளாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குடியுரிமை பாதுகாப்பு இளைஞர் கூட்டமைப்பினரை சந்தித்த ராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
"இந்தியாவில் ஒன்பது மாநிலங்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, NPR, NRC ஆகியவை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், பாஜகவிற்கு அடிமையாக உள்ள தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற தயங்கி வருவதாகவும் அது நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்", என தெரிவித்தார்.

மேலும், வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசு திட்டமிட்டு தான் தடியடி நடத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் தற்போது இஸ்லாமியர்கள் மீது தமிழக அரசு பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார்.

மூன்றாவது நாள் தொடர் தர்ணா போராட்டத்திலும் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.