கோவை: கோவையில் கோனியம்மன் கோனியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி மாவட்ட விடுமுறை அறிவிக்க கோரி பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் கோனியம்மன் கோனியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி மாவட்ட விடுமுறை அறிவிக்க கோரி பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம்.
தேர்ப்பவனியானது, ராஜ வீதியில் இருக்கும் தேர், நிலைத் திடலில் இருந்து புறப்பட்டு ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடையும். இந்த தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்வர்.
இந்த நிலையில், கோவையில் இந்த வருடம் கோனியம்மன் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி மாவட்ட விடுமுறை அறிவிக்கக் கோரி பாஜக சார்பில் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.