கோத்தகிரியில் படுக கிறிஸ்தவ நல சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கொடி தொடக்க விழா

நீலகிரி: கோத்தகிரியில் தாந்தரோடு கிராமத்தில் படுக கிறிஸ்தவ நல சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கொடியினை குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு நேற்று தொடங்கிவைத்தார்.

நீலகிரி: கோத்தகிரியில் தாந்தரோடு கிராமத்தில் படுக கிறிஸ்தவ நல சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கொடியினை குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு நேற்று தொடங்கிவைத்தார்.



கோத்தகிரியில் உள்ள தாந்தரோடு கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல், எலும்பு முறிவு, பொதுநல நல மருத்துவர்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர்.

இதில் மருத்துவர்கள் ஜேசன் தாமஸ், அனுஷா இவாஞ்சலின், பிரதீபா, கமலாக்கர் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி பேரூராட்சி செயலாளர், நீலகிரி மாவட்ட அறநிலையத் துறை அறங்காவலர் சுப்ரமணி, மீதேன் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் ஜேக்கப், கொணவக்கரை டீ பிளான்டேஷன்ஸ் உரிமையாளர் பிரீத்தம், தாஜுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் ஜார்ஜ், துணைத்தலைவர் சம்பத், செயலாளர் ஜீவா, பொருளாளர் ஜெபகுமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...