சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்.பி

கோவை: நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பி.ஆர்.நடராஜன் எம்.பி கலந்துக்கொண்டு பேசினார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் அவர் பேசுகையில், தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழகத்திலுள்ள சிறுபான்மை மக்களை இந்த அரசு பாதுகாக்கும் என்றார். ஆனால், மாநிலங்களவையில் 11 எம்.பிக்களை வைத்துள்ள அதிமுக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நாடு முழுவதும் உள்ள பதற்ற நிலை ஏற்பட்டு இருக்காது. ஆனால், மத்திய அரசிற்கு சாதகமாக வாக்களித்து விட்டு சட்டசபையில் அதிமுக கபடநாடகம் போடுவதாக குற்றம்சாட்டினார்.

எனவே, உடனடியாக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரமாட்டோம் என்று கேரளாவைப் போல ஓர் திர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக கூறிய முதலமைச்சர் நடைபெற்று கொண்டு இருக்கும் சட்டமன்ற கூட்டத்திலேயே அதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...