கோவை: தலைமடை பகுதியான மேட்டுப்பாளையம் மக்களுக்காக தமிழக அரசு அறிவித்த அத்திக்கடவு அவினாசி திட்டம் இரண்டு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாததற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக விவசாயிகள் தலைமடை பகுதி விவசாயிகளை தமிழக அரசு வஞ்சித்து விட்டதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் தலைமடை பகுதியாக திகழும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் கிராமப் பகுதிகள், சர்க்கார் சாம குளம், அன்னூர் ஊரக பகுதிகள் போன்ற இடங்களுக்கு அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் இடம் பெறவில்லை. ஏற்கனவே காமராஜர் காலம் முதல் திட்டமிடப்பட்ட அவினாசி அத்திக்கடவு திட்டம் என்பது பில்லூர் அணைப்பகுதியில் இருந்து மழைக்காலங்களில் உபரியாக வெளியேறியும் தண்ணீரின் ஒரு பகுதியை அத்திக்கடவு என்ற இடத்தில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு அதனை அவினாசி வரை உள்ள குளம் குட்டைகளை நிரப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது
ஆனால், கடந்த இரு ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தினை பவானி சாகர் அணை பகுதியான காளிங்கராயன் வாய்க்கால் பகுதியிலிருந்து நிறைவேற்றப்படும் என தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கினார். இதனால் ஏற்கனவே அறிவித்த திட்டத்தில் தலைமடை பகுதியான மேட்டுப்பாளையத்திற்குட்பட்ட காரமடை ஒன்றிய பகுதிகள்,சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் மற்றும் அன்னூரில் சில பகுதிகளில் புதியதாக கொண்டுவரப்பட்ட திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்டது. இதற்கு இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் விடுபட்ட பகுதிகளான காரமடை, சர்க்கார் சாமகுளம், தொண்டாமுத்தூர் பகுதிகளை ஒருங்கிணைத்து அவினாசி அத்திக்கடவு திட்டம் இரண்டு மேட்டுப்பாளையத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்
அறிவிப்பினை தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மட்டும் மேற்கொண்ட தமிழக அரசு அதற்கு பின்பு எந்த அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில், தற்போது தமிழக அரசின் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு மற்றும் நிதி ஒதுக்குதல் வெளியாகும் என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் ஏற்கனவே அறிவித்த முதல் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதனால் இரண்டாவது திட்டத்திற்கு எந்த அறிவிப்பும் நிதியும் ஒதுக்காத காரணத்தால் அவினாசி அத்திக்கடவு இரண்டாவது திட்டம் நிறைவேற்றப்படும் என அச்சம் அடைந்துள்ள இப்பகுதி விவசாயிகள் அரசு தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக தமிழக விவசாயிகள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளனர்
இது குறித்து இன்று மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதன் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால், தலைமடை பகுதிக்கு தண்ணீர் இன்றி வறட்சியாக இருக்கும் நிலையில் இந்த மூன்று ஒன்றிய பகுதிகளுக்கு தனித் திட்டம் என அறிவித்து விட்டு அதற்கு பின்பு எந்த முயற்சியும் எடுக்காமல் அரசு இந்த பகுதி விவசாயிகளை வஞ்சித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும் அவினாசி அத்திக்கடவு திட்டம் என்பதே அத்திக்கடவு பகுதியில் தண்ணீர் எடுத்து அவினாசி வரை கொண்டு செல்வது ஆனால் தற்போதைய திட்டம் தலைகீழாக பவானி சாகர் பகுதியில் இருந்து இங்கு தண்ணீர் கொண்டுவருவது என்பது இந்த பகுதி விவசாயிகளை வேண்டுமென்றே அரசு நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக பேசிய அவர், இதனால் விவசாயிகளுக்கு நன்மை இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கான பஜ்ஜெட் என அறிவித்து விட்டு அதில் வெறும் அதிகாரிகள் மட்டுமே வைத்து பட்ஜெட் போடுவதால் அதற்கான பலன் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் இல்லை. எனவே மத்திய மாநில அரசுகள் வேளாண் குறித்த பட்ஜெட் போடும் போது விவசாயிகளையும் அவர்களின் தேவைகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எனவே, அவினாசி அத்திக்கடவு இரண்டு திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கி பணியினை துவக்க தமிழக அரசு உரிய அரசாணை பிறபிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.