மேட்டுப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு கட்சியினர் சார்பில் மாபெரும் பேரணி

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா, இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது.

ஐக்கிய ஜமாஅத் பேரவை தலைவர் வி. எம் .இ .முகமது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை ம.தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி பேரணியை தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனியில் இருந்து துவங்கிய இந்த பேரணியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்

மேலும், பேரணியில் பங்கேற்றவர்கள் அனைவரும் தாங்கள் இந்தியன் என்பதை உணர்த்தும் விதமாக தனித்தனியாக தேசியக்கொடியை எடுத்தும் பேரணியின் கூட்டத்தின் நடுவே சுமார் 100 அடி நீளமுள்ள தேசியக்கொடியை கைகளில் உயர்த்தி பிடித்த படியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் முழங்கிய படியும் பேரணியாக சென்றனர்.

கோப்ரட்டீவ் காலனியில் இருந்து காரமடை ரோடு அண்ணாஜிராவ் ரோடு வழியாக சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் வரை பேரணியாக சென்று பெரிய பள்ளிவாசல் திடலில் முடிவடைந்தது. இந்த பேரணியை முன்னிட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பேரணி செல்லும் வழி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்து.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...