வால்பாறையில் காவல்துறையை கண்டித்து த.மு.மு.கழகம் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் த.மு.மு.க சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் த.மு.மு.க சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை ஆனைமலை மஸ்ஜித் தலைவர் அபுதுல் காதர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சி.ஏ.ஏ.சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னை சம்பவத்தை நடத்திய காவல்துறை தமிழக அரசு மத்திய அரசினை கண்டித்து கோஷமிட்டனர். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் ஆண்கள் பெண்கள், குழந்தைகள், நோ சி.ஏ.ஏ. என்ற பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க செபீர், அலி, தி.மு.க சார்பில் நகர செயலாளர் பால்பாண்டி, எல்.பி.எப் தலைவர் சௌந்திரபாண்டியன், கம்யூனிஸ்ட் மோகன் மாணிக்கம், பெரியசாமி ,விடுதலை சிறுத்தை வீரமணி, அ.ம,மு,க குஞ்சாலி, பாபுஜி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

காவல் ஆய்வாளர், பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...