ஈஷாவில்‌ 'யக்க்ஷா' மூன்று நாள் கலைத்‌ திருவிழா பிப்‌.18 - 20

கோவை: பாரத கலாச்சாரத்தை பறைசாற்றும்‌ விதமாக இசை, பாட்டு மற்றும்‌ நாட்டிய நிகழ்ச்சிகளுடன கூடிய 'யக்க்ஷா' கலைத்‌ திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ பிப்ரவரி 18, 19, 20 ஆகிய தேதிகளில்‌ நடைபெற உள்ளது.


கோவை: பாரத கலாச்சாரத்தை பறைசாற்றும்‌ விதமாக இசை, பாட்டு மற்றும்‌ நாட்டிய நிகழ்ச்சிகளுடன கூடிய 'யக்க்ஷா' கலைத்‌ திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ பிப்ரவரி 18, 19, 20 ஆகிய தேதிகளில்‌ நடைபெற உள்ளது.

ஆன்மீக முக்கியத்துவம்‌ வாய்ந்த மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ ஆண்டுதோறும்‌ மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈஷாவின்‌ 26-ம்‌ ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும்‌ 21- ம்‌ தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, மஹாசிவராத்திக்கு முந்தைய 3 நாட்கள்‌ நடக்கும்‌ 'யக்க்ஷா' திருவிழாவில்‌ தலைகறந்த கலைஞர்கள்‌ பங்கேற்று ரசிகர்களுக்கு கலை விருந்து படைக்க உள்ளனர்‌. கலைஞர்கள்‌ தங்கள்‌ கலைத்திறனை வெளிப்படுத்தவும்‌, கேர்ந்த கலை ரசிகர்கள்‌ பாரம்பரிய கலைகளை கண்டு களிப்பதற்கும்‌

இது ஒரு சிறந்த மேடையாக விளங்குகறது.

நிகழ்ச்சி அட்டவணை

18-ம்‌ தேதி திருமதி. கலா ராம்நாத்தின்‌ இந்துஸ்தானி வயலின்‌ இசை நிகழ்ச்சயும்‌, 19-ம்‌ தேதி ஹைதராபாத்‌ சசோதரர்கள்‌ என அழைக்கப்படும் சேஷசாரி மற்றும் ராகவாச்‌சாரி அவர்களின்‌ வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும்‌, 20-ம்‌ தேதி திருமதி. ஷர்மிளா பிஸ்வாஸின்‌ பாரம்பரிய ஓடிசி நடன நிகழ்ச்சயும்‌ நடைபெற உள்ளது. 

இந்த கலை நிகழ்ச்சுகள்‌ சூர்ய குண்ட மண்டபம்‌ முன்பாக தினமும் மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெறும்‌.இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌. மேலும்‌, பாரம்பரிய துணி ரகங்கள்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்களின்‌ கண்காட்சியும்‌ நடைபெற உள்ளது.

21-ம்‌ தேதி மஹாசிவராத்திக்கு வருகை தரும்‌ பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும்‌, சர்ப்ப சூத்துரமும்‌ பிரசாதமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...