திருப்பூரில் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளரின் பழைய இரும்பு கடையில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளரின் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளரின் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

திருப்பூரில் தொடர்ந்து நடைபெறும் மர்மத் தீ விபத்துக்களை போலீசார் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி.

திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் இவர் இந்து முன்னணியின் கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 



மணியாரம்பாளையத்தில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. 

மேலும், கடையில் இருந்த சிசிடிவி மற்றும் கணினிகளும் தீயில் எரிந்து உள்ளதால் அவற்றை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் ஒருவாரத்திற்குள்ளாக இரு வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம தீ விபத்துகள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...