திருப்பூர்: திருப்பூரில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் இரண்டாம் நாளாக இன்றும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்திய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் NPR , NRC உள்ளிட்டவற்றை செயல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பூர் அறிவொளி சாலையில் நேற்று காலை முதல் பெண்கள் குழந்தைகள் உட்பட இஸ்லாமியர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடிய விடிய அதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் தங்களது தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.