கோத்தகிரியில் சுறுக்கு கம்பியில் சிக்கி கொண்ட புலி: 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் வனப்பகுதிக்குள் தப்பி ஓட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள உயிலட்டி பகுதியில் இருந்த சுறுக்கு கம்பியில் சனிக்கிழமையன்று சிக்கி கொண்ட புலி சுறுக்கு கம்பி தானாக கழன்றதால் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள உயிலட்டி பகுதியில் இருந்த சுறுக்கு கம்பியில் சனிக்கிழமையன்று சிக்கி கொண்ட புலி சுறுக்கு கம்பி தானாக கழன்றதால் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டிப் பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே சுறுக்கு கம்பிகள் வைக்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில் இவ்வழியாக வந்த புலி ஒன்று இந்த சுறுக்கு கம்பியில்மாட்டிக் கொண்டது. புலியின் உறுமல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் 

வன மருத்துவர் காேவையில் இருந்து வரவேண்டும் என்பதால் வன அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்கள் யாரும் அருகே செல்லாத வண்ணம் பாதுகாத்தனர்.



அதையடுத்து, கோவையிலிருந்து வன மருத்துவர் மனோகரன் மாலை கோத்தகிரி வந்த பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து காெண்டிருக்கும் பாேதே புலியின் காலில் இருந்த சுறுக்கு கம்பி கழன்றதால் அது தானாக அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பாய்ந்து சென்றத. 

இதன் காரணமாக இப்பகுதியில் 5 மணி நேரமாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...