திருப்பூர்: திருப்பூரில் குழந்தைகள் பெண்கள் உட்பட இஸ்லாமியர்கள் குடும்பமாக போராட்ட களத்திலேயே தொழுகையை நடத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைப்பெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்திய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் , நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் NPR , NRC உள்ளிட்டவற்றை செயல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் அறிவொளி சாலையில் இன்று காலை முதல் பெண்கள் குழந்தைகள் உட்பட இஸ்லாமியர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் போராட்ட களத்திலேயே தொழுகை நடத்தி தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.