சென்னை: சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அட்சய பாத்திர மைய சமையல் கூடத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்தியா முழுவதும் ‘அட்சய பாத்திரம்' அறக்கட்டளை தினந்தோறும் 16 ஆயிரத்து 856 பள்ளிகளில் படிக்கும் 18 லட்சத்து 2 ஆயிரத்து 517 குழந்தைகளுக்கு உணவு அளித்து வருகிறது.
இந்த அறக்கட்டளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து காலை உணவு திட்டத்தை 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள 24 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 785 மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.
அட்சய பாத்திரா அறக்கட்டளைக்கு திருவான்மியூரில் ஏற்கனவே ஒரு சமையல் கூடம் உள்ளது. அங்கிருந்து பள்ளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஏற்கனவே பல தலைவர்களால் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சத்துணவுத் திட்டமாக மாற்றியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அம்மா இத்திட்டத்திற்கு மேலும் மெருகேற்றி, சத்துணவில் வழங்கப்படும் உணவு வகைகளை மாற்றியமைத்து, கலவை சாதங்கள் உள்ளிட்ட 13 வகையான உணவுகளுடன் மசாலா முட்டைகளும் வழங்க உத்தரவிட்டார்.
படிக்கும் ஏழை மாணாக்கர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்தாலும், நகர்ப்பகுதிகளில் வாழும் சமுதாயத்தின் ஏழை, அடித்தட்டு மக்களுக்கும் பசியில்லா நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் ‘அம்மா உணவகம்’.
முதலில் சென்னையில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, இத்திட்டம் மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு ‘அட்சய பாத்திரா’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
இந்தியா முழுவதும் தினந்தோறும் 16 ஆயிரத்து 856 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 2 ஆயிரத்து 517 குழந்தைகளுக்கு இந்த நிறுவனம் உணவு அளித்து வருவது ஒரு உன்னதமான மனிதநேயச் செயலாகும்.
இந்த நிறுவனம் 2019ம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ‘காலை உணவுத் திட்டம்’என்ற திட்டத்தினை செயல்படுத்தி, தற்போது சென்னையில் உள்ள 24 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 5,785 மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.
இத்திட்டத்திற்கு உணவு தயாரிப்பதற்காக, சுமார் 2 கோடி ரூபாய் செலவில் திருவான்மியூரில் ஒரு சமையலறை அமைத்து, அங்கு இட்லி, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது என்பதையும் அறிவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த காலை உணவு திட்டத்தினை பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு கிரீம்ஸ் சாலையில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பிலும் மற்றும் பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் சுமார் 35 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், முறையே 12 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் மாணாக்கர்களுக்கு உணவு வழங்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் அமைப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்காக இங்கு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களிலேயே இவ்விரு மைய சமையல் கூடங்கள் அமைக்க அம்மாவின் அரசு அனுமதி அளித்துள்ளதுடன், இதற்கான குடிநீர், மின் இணைப்பு மற்றும் மின்சார கட்டணத்தையும் பெருநகர சென்னை மாநகராட்சியே செலுத்த அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.
கிரீம்ஸ் சாலையில் அட்சய பாத்திர நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட உள்ள நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சமையல் கூடத்திற்கு உண்டான செலவினத்திற்கு ஆளுநர் தனது விருப்புரிமை நிதியின் மூலம் நிதி உதவி வழங்கியுள்ளதற்கு நான் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அட்சய பாத்திரா என்ற இந்த நிறுவனம், சென்னை மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பசியின்றி படிப்பினை தொடர, உங்களது காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவுகளை சேர்க்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று நான் முதலமைச்சராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. பள்ளி மாணவர்களின் பசியை போக்க, எங்கள் இயக்கத்தின் தலைவர் புரட்சித் தலைவரால் துவக்கப்பட்டு, பின்னர் அம்மாவால் மெருகேற்றப்பட்ட மதிய சத்துணவுத் திட்டத்தினை போன்று, அட்சய பாத்திரா நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் சமையல் கூடங்கள் அமைக்க நடத்தப்படும் பூமி பூஜை விழா என்ற ஒரு அன்னதானம் வழங்குதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை பெற்ற பெரும் பேராக கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஆளுநர் பன்வாரிலால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், சரோஜா, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.