நீலகிரி: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் அமைப்பு சார்பி்ல் இன்று காலை முதல் கடைகள் அடைத்து போராட்டம் நடந்த நிலையில், தாெடர்ந்து மாலையில் உதகை ரயில் நிலையம் துவங்கி ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன பேரணி நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே பாேன்று குன்னூர் மவுண்ட் ராேட்டில் நடைபெற்ற பேரணியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், காேத்தகிரி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இதே பாேன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டம் மற்றும் பாேராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்துள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.