நீலகிரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கருஞ்சிறுத்தை; விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என வனத்துறையினர் விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் கருஞ்சிறுத்தை இறந்த கிடந்த நிலையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் கருஞ்சிறுத்தை இறந்த கிடந்த நிலையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நீலகிரியில் காட்டை இழந்த வனவிலங்குகள் வனத்தையொட்டிய தேயிலைத் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளன. உணவுக்கும் தண்ணீருக்கும் தவிக்கும் விலங்குகள் பல்வேறு நேரங்களில் குடியிருப்புகளையொட்டிய பகுதிகளிலேயே உலா வருகின்றன. 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து, உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். மேலும், கால்நடை மருத்துவரை வரவழைத்து இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது.

பின்னர் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கருஞ்சிறுத்தையின் உடலை கால்நடை மருத்துவர் ராஜன் தலைமையில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளோம். நோய் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கருஞ்சிறுத்தையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே முழுமையான விவரம் தெரியவரும்" என்றனர்.

மேலும், சமீப காலமாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் மர்மமான முறையில் இறக்கின்றன முறையான விசாரணை மேற்கொண்டு இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...