கோவை: நம்முடன் வாழ முடியாது என்று சொல்லிவிட்டு சென்ற முஸ்லீம்களை மீண்டும் நாம் அழைத்தால், அவர்களால் நம் இந்தியாவில் வாழும் நமது முஸ்லீம்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள் என கோவை குண்டு வெடிப்பு அஞ்சலி கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை: நம்முடன் வாழ முடியாது என்று சொல்லிவிட்டு சென்ற முஸ்லீம்களை மீண்டும் நாம் அழைத்தால், அவர்களால் நம் இந்தியாவில் வாழும் நமது முஸ்லீம்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள் என கோவை குண்டு வெடிப்பு அஞ்சலி கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் சார்பில் அவினாசிலிங்கம் இரண்டாம் கேட் நுழைவு வாயில் முன்பு துவங்கிய பேரணியானது மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி, காமராஜபுரம் சாலை வழியாக வலதுபுறம் மீண்டும் திரும்பி ஈஸ்ட் டி.வி சாமி சாலை வழியாக தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது.

இந்த பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு அஞ்சலி கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாகிஸ்தான், பங்களாதேஷ் நம்முடைய பூமி எனவும் 1906ம் ஆண்டு இந்துக்களுடன் எங்களால் வாழ முடியாது என்று முஸ்லீம்கள் பிரிந்து சென்றதாகவும் இந்த நாட்டை துண்டாட வேண்டும் என்று அவர்கள் கூறியதாக குற்றம்சாட்டினார்.

மேலும், துண்டாடப்பட்ட இந்துக்களின் நிலைமையை பற்றி காங்கிரஸ் கவலை பட்டதுண்டா என்று கேள்வி எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன், பாகிஸ்தானில் உள்ள இந்துகளை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்ன ஒரே தலைவன் டாக்டர் அம்பேத்கர் என்று பேசினார்.
1947ம் ஆண்டுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை திருமாவளவன், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பட்டியிலன மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் ஓட்டுக்காக 1967ம் ஆண்டுக்கு ஆட்சிக்கு வர திமுகவினர் என்ன செய்தார்களோ, அதேபோல் தற்போதும் பிரிவினை வாதம் செய்ய முயற்சிப்பதாக கூறினார்.
மேலும், நம்முடன் வாழ முடியாது என்று சொல்லிவிட்டு சென்ற முஸ்லீம்களை மீண்டும் நாம் அழைத்தால், அவர்களால் நம் இந்தியாவில் வாழும் நமது முஸ்லீம்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள் என்றும் 15 சதவீத இஸ்லாமியர்கள் தெருவுக்கு வருவீர்கள் என்றால் 80 சதவீத இந்துக்களும் தெருவுக்கு வருவோம் என்றார்.
பாகிஸ்தான் நமது எதிரி நாடு, அதில் எந்தவித மாற்றமும் கிடையாது என்றும் கன்னியாகுமரியில் பயங்கரவாதிகள் வில்சனை கொல்ல வரவில்லை, காவலர்களை கொலை செய்ய வந்திருக்கிறார்கள் என்று பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுக்கிறீர்கள் என்றால் அது எங்களின் உயிருக்கு உலை வைக்கும் செயல் என்றும் அந்த வேலையை நீதித்துறையும், காவல்துறையும் செய்வதாக குற்றம்சாட்டினார்.