மேட்டுப்பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க இரண்டு கூண்டுகள் தயார் - வனத்துறை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் உள்ளது சிட்டேபாளையம் கிராமம், கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் உள்ளது சிட்டேபாளையம் கிராமம், கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள இந்த கிராமம் மலை அடிவார பகுதியாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் சிறுத்தை ஓன்று நுழைந்து விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கபட்டிருந்த முருகன் என்பவரது பசுமாட்டினை வேட்டையாடி இழுத்து சென்றது. அதையடுத்து, அதே பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு நுழைந்த சிறுத்தை சரவணன் என்பவரது வீட்டின் அருகே ஆட்டு பட்டியில் அடைத்து வைக்கபட்டிருந்த வெள்ளாடு ஒன்றை கடித்து கொன்றுள்ளது.

பின்னர், இரவு அங்கு பட்டியில் அடைத்து வைக்கபட்டிருந்த மற்ற ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது சிறுத்தை அங்கிருந்து ஓடியது, இதனால் அந்த கிராம மக்களிடம் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து கால்நடைகளை வேட்டையாடியது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.

இதனையடுத்து இன்று சிறுமுகை வனத்துறை சார்பில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க முடிவு செய்யபட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டது.



சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மூலம் டிராக்டர் மூலம் எடுத்துவரபட்டு சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடிய பெரியதோட்டம் பகுதியில் இன்று வைக்கப்பட்டது.

பெரிய தோட்டம் தேன்கல் கரடு பகுதியில் ஒரு கூண்டும், அந்த மலை தொடர் அமைந்துள்ள பால்காரன் சாலை பகுதியில் மற்றொரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூண்டுகளில் நாய்கள் வைக்கபட்டு அதன் மூலம் சிறுத்தையை பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்துபேசிய வனத்துறை அலுவலர் மனோகரன் கிராமத்தில் நுழையும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கபட்டுள்ளதுடன் வேட்டை தடுப்பு காவலர்கள் இந்த கிராமத்தில் பணியமர்த்தபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவே கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை, என தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...