நீலகிரி: நீலகிரியில் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளை குறிவைத்துத் தாக்கும் கரடியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி வரும் கரடி மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் பேபி என்பவரின் வீட்டின் கேட்டை உடைத்து வெளியே இருக்கக்கூடிய பொருட்களை சேதம் செய்து விட்டுச் சென்றது. மேலும் அருகே உள்ள வீட்டின் இரும்பு கதவுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது.

இதே போன்று மஞ்சூர் கெட்டாரகண்டி பகுதியில் உள்ள பாலு என்பவரின் பட்டறையை பின்புறமாக தகரங்கள் பெயர்த்து உட்புகுந்து, அங்கே இருக்கக்கூடிய எண்ணெய்களை குடித்தும், பொருட்களை சிதறடித்தும் சென்றுள்ளது. தினந்தோறும் கரடியின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.