கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை சாலையில் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஸ்டான்மோர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பாலம் உள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பழமையான இந்த குறுகிய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. இதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதன் காரணமாக இப்பகுதி வழியாக செல்லக்கூடிய சோலையார் அணை, உருளிக்கல், குரங்குமுடி, இஞ்சிப்பாறை, மானிக்கா, வில்லோனி, மழுக்கப்பாறை மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி சாலை ரொட்டிக்கடை பழைய வால்பாறை வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலம் கட்டி முடிய குறைந்தது 6 மாதம் வரை ஆகலாம் என்றும் இது தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என்று கூறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய வியாபாரிகள் சங்கத்தினர், ரொட்டிக்கடை வழியாக சுற்றிச்செல்வது மிகுந்த கஷ்டத்தை உண்டாக்கும், மேலும் ஸ்டான்மோர் பகுதி மக்களுக்கு பேருந்து வசதி கிடைக்காது. ஆகவே, பழைய பாலத்தை இடிக்காமல் அப்பகுதியிலேயே மாற்றுப்பாலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கோரிக்கையை அனைவரும் கையெழுத்திட்டு சார் ஆட்சியருக்கு அனுப்ப முடிவெடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.