கோவையில் காதலர் தின கொண்டாட்டம்; சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்..!

கோவை: கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இரண்டு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இரண்டு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.



இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை இரு காதல் ஜோடிகளுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்ட இரு ஜோடிகளும் உறுதிமொழி ஏற்று திருமணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இன்று மட்டும் 4 காதல் திருமணங்கள் செய்து வைக்கப்படுவதாகவும், இரு திருமணங்கள் முடிந்த நிலையில், மாலையில் இரு திருமணங்கள் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். சாதிய கட்டுமானங்கள் தகர்த்து போக சாதி மறுப்பு காதல் திருமணங்கள் அவசியம் எனவும் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இதுவரை கோவை பெரியார் படிப்பகத்தில் 4500 காதல் திருமணங்கள் செய்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் சிறப்பாக வாழ்கையை நடத்துகின்றனர் எனவும் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடந்த 9 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், காதல் திருமணம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், இன்று காதலர் தினம் என்பதால் இன்றைய தினத்தை தேர்வு செய்து திருமணம் செய்து இருப்பதாக காதல் திருமணம் செய்த வழக்கறிஞர் சீனிவாசன் தெரிவித்தார்.



மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு பெரியார் படிப்பக வாசலில் கேக்வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களும், ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் கேக் வெட்டி உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...