திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் இந்து முன்னணி கோட்ட செயலாளராக உள்ளவரின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை காவல்துறை இன்னும் கைது செய்யாமல் இருப்பதாகவும் உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி எதிராக இந்து முன்னணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
உரிய குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை காலம் தாழ்த்தினால் திருப்பூர் ஸ்தம்பிக்க கூடிய வகையில் மிகப்பெரிய கடையடைப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் கூறினார்.