நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கேத்தி பகுதியில் தனியார் பள்ளிக்குள் புகுந்த காட்டெருமையால் அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு மற்றும் சாலைகளில் வரும் காட்டெருமைகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குன்னூர் அருகேயுள்ள கேத்தி பகுதியில் இன்று வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டெருமை அங்குள்ள லெய்டி லா (laidy law) என்ற தனியார் பள்ளிக்குள் புகுந்தது. உடனே அங்கிருந்த மாணவர்கள் ஒட்டம் பிடித்து வகுப்பறைக்குள் சென்றனர். காட்டெருமை அங்கும் இங்கும் சுற்றியதால் பள்ளி மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து, அங்கு பணியாற்றும் காவலாளிகள் காட்டெருமையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் மாணவ மாணவிகள் நிம்மதியடைந்தனர். வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு காட்டெருமைகளைக் கண்காணித்து வேறு வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.