கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் இ.ஆ.ப. பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர் தணிகைவேல், பொள்ளாச்சி நகராட்சி பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தின் நகர்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு செயல்படுத்தும் வளர்ச்சித்திடப்பணிகள் உரிய முறையில் செயல்படுத்த, சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், சாலை மேம்பாட்டுப்பணிகள், பள்ளிக் கட்டுமானப் பணிகள், கால்நடை சந்தை, காய்கறி மார்க்கெட், அரசு பள்ளி மாணவ மாணவியர் விடுதிகள், மற்றும் பாதாளசாக்கடைப் திட்டம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, ஆச்சிப்பட்டி, எ.சங்கம்பாளையத்தில் அமைந்துள்ள நுண்ணுயிர் உரமாக்குதல் மையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் நூண்ணாயிர் உரத்தினை தரமானதாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், பொள்ளாச்சி நகராட்சி, வார்டு எண்-21 பகுதியில் மீன்கரை ரோடு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.170கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், நீருந்து நிலையங்கள், கழிவுநீர் கால்வாய்கள், கழிவு நர் சேகரிப்பு குழாய்கள், கழிவு நீர் உந்து நிலையங்கள், மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய முறையில் அமைக்கவும், இப்பணிகளை விரைந்து முடிக்கும் வரை 15 நாட்களுக்கு ஒருமுறை திட்டத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சி மாட்டுச் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அவர்கள், அப்பகுதியில் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் வசதிகளும், நிழற்குடைகள் மற்றும் மின்விளக்குகள் அமைப்பதுடன், சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் செய்திடவும், அறிவுறுத்தியதுடன், பின்னர் காய்கறி சந்தையில் நேரில் பார்வையிட்டு காய்கறி கழிவுகளால் உருவாகும், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும், கழிப்பறைகளை தினந்தோறும் நகராட்சி சுகாதார பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தவும், மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல ஏதுவாக சாய்தள வசதி அமைக்கவும், நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி வியாபாரிகளிடம் தனித்தனியாக குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி ஜோதிநகர் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் பூங்காவினையும், ஜோதிநகர், சங்கர்நகர், குறுக்கு வீதி பகுதிகளில் ரூ.53 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சாலையினை தரமானதாக அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அரசு ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதி, அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்யவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கழிவறைகளில் போதிய அளவிலான தண்ணீர் வசதி செய்யவும், அலுவலர்கள் அறிவுறுத்தியதுடன் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களிடம் தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், கோட்டூர் சாலையில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதுபோலவே, சமத்தூர் அய்யங்கார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் ரோலார் ஸ்கேட்டிங் மைதானம் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நகராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி உத்தரவிட்டார்.