பாலியஸ்டர்‌ ஜவுளி பொருள்‌ உற்பத்திக்கு மாறுங்கள்‌ - மத்திய ஜவுளித்துறை செயலர்‌ அறிவுரை

இந்திய ஜவுளி கூட்டமைப்பு, தென்னிந்தியாவில்‌ உள்ள பல்வேறு சங்கங்களின்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ பிரதிநிதிகளை அழைத்து கோவையில்‌ மத்திய ஜவுளித்துறை செயலர்‌ ரவி கபூர்‌ அவர்களுடன்‌ ஒரு கலந்துரையாடலை நடத்தியது. மேற்படி கலந்துரையாடலில்‌ ஜவுளித்தொழிலின்‌ அனைத்து பிரிவுகளையும்‌ சார்ந்த 48 ஜவுளி சங்கங்களின்‌ பிரதிநிதிகள்‌ கலந்து கொண்டனர்‌. இதை தவிர தேசிய ஜவுளி அமைப்புகளான AEPC, TEXPROCIL, PDEXCIL, SRTEPC, AMFII சார்பிலும்‌ சம்மந்தப்பட்ட தலைவர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இந்திய ஜவுளி கூட்டமைப்பு, தென்னிந்தியாவில்‌ உள்ள பல்வேறு சங்கங்களின்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ பிரதிநிதிகளை அழைத்து கோவையில்‌ மத்திய ஜவுளித்துறை செயலர்‌ ரவி கபூர்‌ அவர்களுடன்‌ ஒரு கலந்துரையாடலை நடத்தியது. மேற்படி கலந்துரையாடலில்‌ ஜவுளித்தொழிலின்‌ அனைத்து பிரிவுகளையும்‌ சார்ந்த 48 ஜவுளி சங்கங்களின்‌ பிரதிநிதிகள்‌ கலந்து கொண்டனர்‌. இதை தவிர தேசிய ஜவுளி அமைப்புகளான AEPC, TEXPROCIL, PDEXCIL, SRTEPC, AMFII சார்பிலும்‌ சம்மந்தப்பட்ட தலைவர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும்‌ சேவை வரி அமல்‌, உலகளவிலான பொருளாதார தேக்க நிலை, அமெரிக்க மற்றும்‌ சீனாவிற்கு இடையேயான வர்த்தக போர்‌ மற்றும்‌ சமீபத்தில்‌ சீனாவில்‌ உருவாகியிருக்கும்‌ கரோனா வைரஸ்‌ ஆகியவற்றால்‌ இந்திய ஜவுளித்‌ தொழில்‌ மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. உள்நாட்டில்‌ ஜவுளித்தொழிலில்‌ ஒரு நிலையான வளர்ச்சி இருந்த போதிலும்‌, கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுமதி குறைந்தே காணப்படுகிறது. சீனா தனது உற்பத்தியை குறைத்து வருகிறது, அதற்கு பதிலாக வெளிநாடுகளில்‌ இருந்து தனது தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. இதனால்‌ பன்னாட்டு அளவில்‌ ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சிறிய நாடுகளான வங்கதேசம்‌, வியட்நாம்‌ போன்றவை முழுமையாக உபயோகப்படுத்திக்‌ கொண்டதால்‌, பல வருடங்களாக உலக ஜவுளி வர்த்தகத்தில்‌ 2ம்‌ இடத்தில்‌ இருந்த நமது நாடு 5ம்‌ இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

உலகளவில்‌ பருத்தி பஞ்சு மற்றும்‌ செயற்கை பஞ்சு ஆகியவற்றின்‌ நுகர்வு அளவு 30: 70 என்ற அளவில்‌ இருக்கும்‌ பொழுது, நமது நாட்டில்‌ மட்டும்‌ அது முற்றிலும்‌ தலைகீழாக உள்ளது. மொத்தத்தில்‌ நம்‌ நாட்டில்‌ பருத்தி அதிகமாக விளைவதால்‌, பருத்தியை மையமாக கொண்ட ஜவுளி‌ பொருட்களின்‌ ஏற்றுமதி 80 சதவீதம்‌ அளவுக்கும்‌, செயற்கை பஞ்சின்‌ விலை அதிகமாக இருப்பதால்‌ அது சார்ந்த ஜவுளிப்‌ பொருட்களின்‌ ஏற்றுமதி 20 சதவீதம்‌ என்ற அளவிலேயே உள்ளது. இந்தியாவில்‌ பாலியஸ்டர்‌ பஞ்சை கொண்டு உற்பத்தி செய்யப்படும்‌ பொருட்கள்‌ குறைவாக இருப்பதற்கு, அதன்‌ மீது குவிப்பு வரி விதிப்பதேயாகும்‌. சமீபத்திய மத்திய பட்ஜெட்டில்‌, PTA எனப்படும்‌ செயற்கை பஞ்சு மூலப்‌ பொருள்‌ மீதான குவிப்பு வரியை அரசு முற்றிலும்‌ நீக்கி சந்தையில்‌ போட்டியிடும்‌ வண்ணம்‌ ஒரு சமதளம்‌ உருவாக்கியுள்ளது. இந்த பஞ்சிற்கு குவிப்பு வரி ஒரு மெட்ரிக் டன்னுக்கு 27 அமெரிக்க டாலரிலிருந்து 160 அமெரிக்க டாலர்‌ வரை விதிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிட்டி என்று அழைக்கப்படும்‌ இந்திய ஜவுளி கூட்டமைப்பின்‌ தலைவர்‌, த.ராஜ்குமார்‌ அவர்கள்‌ கூறியிருப்பதாவது:-







மத்திய ஜவுளித்துறை செயலர் ரவி கபூர்‌ அவர்களுடன்‌ 12.2.2020ம்‌ தேதியன்று கோவையில்‌ உள்ள ஹோட்டல்‌ லீமேரிடியனில்‌ தென்னிந்தியாவில்‌ உள்ள பல்வேறு ஜவுளி சங்கங்களை அழைத்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது. அதில்‌ ஜவுளித்துறையின்‌ பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிட்டத்தட்ட 200 ஜவுளி தொழில்‌ அதிபர்கள்‌ கலந்து கொண்டனர்‌. மேற்படி கலந்துரையாடலில்‌, ஜவுளித்துறை செயலர் ரவி கபூர்‌ தவிர, ஜவுளித்துறை இணை செயலர் நிஹார்‌ ரஞ்சன்‌ தாஸும்‌ கலந்து கொண்டார்‌.

சிட்டி தலைவர்‌ மேலும்‌ கூறுகையில்‌, கலந்துரையாடலில்‌ கலந்து கொண்ட அனைத்து ஜவுளி சங்கங்களின்‌ பிரதிநிதிகளும் செயற்கை பஞ்சு மீதான குவிப்பு வரியை நீக்கி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவை மேற்கொண்ட பிரதமர்‌, மத்திய ஜவுளித்துறை அமைச்சர்‌ மற்றும்‌ மத்திய ஜவுளித்துறை செயலர்‌ ஆகியோருக்கு தங்களது நன்றியையும்‌, பாராட்டுதலையும்‌ தெரிவித்துக்‌ கொண்டனர்‌. அரசு மேற்கொண்ட இந்த முடிவினால்‌, செயற்கை பஞ்சை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும்‌ ஜவுளி பொருட்களின்‌ விலை கணிசமாக குறையும்‌ என்று தெரிவித்தார்‌. கடந்த நான்கு ஆண்டுகளாக அதிக முதலீட்டுடன்‌ ஜவுளித்துறையின்‌ அனைத்து பிரிவுகளிலும்‌, உற்பத்தி கொள்ளளவு உருவாக்கப்பட்டுள்ளது. அரசின்‌ இந்த அறிவிப்பின்‌ மூலம்‌ அந்த உற்பத்தி கொள்ளளவை பாலியஸ்டர்‌ ஜவுளிப்‌ பொருட்கள்‌ உற்பத்திக்கு உபயோகப்படுத்திக்‌ கொள்ள முடியும்‌.

ஜவுளித்துறை செயலர்‌ தனது உரையில்‌ தமிழகத்தில்‌ உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள்‌ தங்கள்‌ உற்பத்தியை பருத்தி ஜவுளிப்‌ பொருட்களில்‌ இருந்து, பாலியஸ்டர்‌ ஜவுளிப்‌ பொருட்களுக்கு மாறி, வாய்ப்பை பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்‌ என்று அறிவுரை வழங்கினார்‌. திருப்பூர்‌ மற்றும்‌ கோவையில்‌ சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்‌ வண்ணம்‌ மாசில்லா கழிவுநீர் வெளியேற்றத்திற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு தனது பாராட்டை தெரிவித்துக்‌ கொண்டார்‌. அதே போன்று திருப்பூர்‌ பின்னலாடை உற்பத்தியாளர்கள்‌ தங்களது உற்பத்தி பொருட்களை மேற்கண்ட சிறப்பு அம்சங்களுக்கு ஒரு முத்திரை (Brand) உருவாக்கும்‌ வகையில்‌ ஒரு நிலையான திட்டத்தை உருவாக்கி அதன்‌ மூலம்‌ உலகளவில்‌ அதிக இலாபம்‌ பெறலாம்‌. அதற்கு அரசு தன்னாலான அனைத்து உதவிகளும்‌ செய்யும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌.



மத்திய ஜவுளித்துறை செயலர்‌ மேலும்‌ தனது உரையில்‌ கூறுகையில்‌, அரசு கொண்டு வரவுள்ள புதிய ஜவுளிக்‌ கொள்கையில்‌, கட்டமைப்பு சிக்கல்கள்‌ ஏற்பட்டால்‌ அது சரி செய்யப்படும்‌ என்றும்‌, அனைத்து மூலப்‌ பொருட்களும்‌ பன்னாட்டு விலையில்‌ கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்‌ என்றும்‌, துறைமுகங்களுக்கு அருகில்‌ 1000 ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌ 10 ஜவுளி பூங்காக்கள்‌ அமைத்து அதிக உற்பத்தி செய்து நமது பொருட்களை குறைந்த விலையில்‌ போட்டியிடும்‌ வகையில்‌ ஏற்பாடு செய்யப்படும்‌ என்றும்‌, மேற்படி பூங்காவில்‌ அனைத்து வசதிகளும்‌ செய்து கொடுக்கப்படும்‌ என்றும்‌ அவர்‌ தெரிவித்தார்‌. மேலும்‌, மின்சார செலவு, கடன்‌ செலவு, அதை ஏற்படுத்தி. கொடுப்பதுடன்‌, அரசு ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும்‌ இங்கிலாந்து நாடுகளுடன்‌ வரியில்லா ஒப்பந்தம்‌ ஏற்படுத்த துரித முயற்சிகள்‌ மேற்கொண்டு ஏற்றுமதியை அதிகரிக்க வழி வகுக்கப்படும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌.

சிட்டி தலைவர்‌ ராஜ்குமார்‌ கூறுகையில்‌, மத்திய அரசின்‌ “மேக்‌ இன்‌ இந்தியா” அட்டத்தின்‌ கீழ்‌, ஜவுளித்‌ தொழிலில்‌ மட்டுமே மூலப்பொருளில்‌ இருந்து 'இறுதியாக தயாரிக்கப்படும்‌ ஆடை வரை நமது நாட்டிலேயே உற்பத்தியாகி, அனைவரையும்‌ உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டு பல்வேறு திறன்‌ சார்ந்து ஆட்களுக்கு வேலை வாய்ப்பளிக்கிறது என்று தெரிவித்தார்‌. தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்காகவும்‌, ஜவுளி இயந்திரங்கள்‌. அதன்‌ உதிரிபாகங்கள்‌ உற்பத்தி செய்து இறக்குமதியை தவிர்க்கவும்‌ அரசு நவீன தொழில்நுட்பத்துடன்‌ ஜவுளிப்‌ பூங்காக்கள்‌ அமைத்து, மூலதன செலவை கணிசமாக குறைக்கும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌. மேலும்‌, அரசு ஆராய்ச்சிக்காக நவீன தொழில்நுட்பத்துடன்‌ ஜவுளி உற்பத்தி கேந்திரங்களில்‌ மையங்கள்‌ அமைக்க முயற்சி மேற்கொள்ளும்‌ என்றும்‌ அவர்‌ தெரிவித்துள்ளார்‌.

மேற்படி கூட்டத்தில்‌ தேசிய ஜவுளி அமைப்புகளின்‌ சார்பாக பத்மஸ்ரீ டாக்டர்‌ ஏ சக்திவேல்‌, பிரேம்‌ மாலிக்‌, எம்‌.செந்தில்குமார்‌, ராகேஷ்‌ சர்மா மற்றும்‌ அஜய்‌ சதானா ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌. விழா முடிவில்‌, சிட்டி அமைப்பின்‌ துணைத்தலைவர்‌ டி.எல்‌.சர்மா நன்றி தெரிவித்தார்‌.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...