கோவையில் நாளை குண்டு வெடிப்பு நினைவு தின பேரணி; பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்!

கோவை: குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நாளை நடைபெற உள்ள பேரணிக்காக மேற்கு மண்டலம் மற்றும் மதுரை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கோவை: குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நாளை நடைபெற உள்ள பேரணிக்காக மேற்கு மண்டலம் மற்றும் மதுரை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பாரதிய ஜனதா கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள் மற்றும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், நாளை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள் மற்றும் மௌன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணிகளுக்காக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், 2 டிஐஜிக்கள், 4 துணை ஆணையர்கள், 8 மாவட்ட எஸ்.பிக்கள், மாநகர மற்றும் 8 மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், கமாண்டோ பிரிவு போலீசார், அதிவிரவுப்படை போலீசார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் கோவை மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், இந்த பாதுகாப்பு பணிகள் குறித்து இன்று ஏடிஜிபி ஜெயந்தி முரளி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...