கோவை: கோவையில் பெண் போலீஸ் மற்றும் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் மகேந்திரன் என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதனிடையே காவல் நிலையத்தின் உள்ளே நேற்று மாலை பணியிலிருந்த மகேந்திரன் வழக்கு ஒன்று தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார்.
அப்போது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்..மேலும் உதவி ஆய்வாளர் மற்றும் சக காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வாலிபரை கண்டித்த காவலர்கள் அந்த வாலிபரை வெளியே அனுப்ப முற்பட்டனர்.
மேலும், தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தமான் தீவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பெத்துகுமார் (34) என்பதும் தற்போது ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. காந்திபுரத்தில் அருகே உள்ள டாஸ்மாஸ்க் கடையில் மது அருந்திய பெத்துகுமார் குடிபோதையில் காவல் நிலையத்திற்குள் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக பெத்துகுமார் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதேபோல், கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஜோதி மாணிக்கம் என்பவரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.