முதுமலையில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியின் காரணமாக காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியின் காரணமாக காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



தெப்பக்காடு மசினகுடி சாலையின் இருபுறமும் காய்ந்த புற்களை ஆறு மீட்டர் அகலத்தில் தீ வைத்து வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மசினகுடி வனச்சரகத்தில் சாலையோரம் மற்றும் வனப்பகுதியின் உள்ளே என 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு இப்பணிகள் நடைபெறுகின்றன.

முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதிகளான மசினகுடி, சீகூர், சிங்காரா உள்ளிட்ட வனச்சரகங்களில் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதேபோல் காய்ந்த புற்கள் கொடிகள் எரிக்கப்பட்டு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, கார்குடி, முதுமலை ஆகிய சரகங்களில் 300 மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீ ஏற்படாமல் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், இதற்காக 120 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடம் அருகில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து காட்டுத் தீ முதுமலைக்குள் பரவியதால் ஏற்பட்ட சேதம் காரணமாக இந்த வருடம் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...