திருப்பூர்: திருப்பூரில் வாங்கிய கல்விக் கடனுக்கு அதிக வட்டியுடன் கட்டணம் செலுத்த வங்கி நிர்வாகம வற்புறுத்துவதால் கடனை ரத்து செய்யக்கோரி இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் வாவிபாளையத்தை சேர்ந்த பிரபா என்பவர் 2013 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் 1155 மதிப்பெண் எடுத்திருந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக வங்கியில் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்து கல்லூரி படிப்பைத் துவங்கியுள்ளார். இந்நிலையில் கல்லூரி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கல்வி கடன் கிடைக்காத நிலையில் வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி படித்துள்ளார்.
இரண்டு ஆண்டு தொடர் போராட்டத்திற்கு பின் மூன்றாம் ஆண்டு திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் ரூபாய் 2 லட்சத்து 69 ஆயிரம் கல்விக் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கல்வி கடன் பெற்றது முதல் மாதந்தோறும் அதற்கான வட்டியை செலுத்தி வரும் சூழ்நிலையில் 2017 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பின்பு ஓர் ஆண்டு வேலை இல்லாமல் தற்போது சென்னையில் வேலைக்கு சேர்ந்துள்ள சூழ்நிலையில் தற்போது உடனடியாக 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கட்ட வேண்டும் என வங்கி வற்புறுத்தி வருவதாக குற்றம் சாடியுள்ளார்.

மேலும், தற்போது உள்ள சூழ்நிலையில் உடனடியாக தன்னால் பணத்தை கட்ட முடியாது எனவும் ஆனால் வங்கி நிர்வாகம் தொடர்ந்து நெருக்கி வருவதோடு, இப்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், அதனால் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.